மாவீரர் அழகுமுத்துக்கோன் வீரத்தின் வரலாறு பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும் – பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து

இந்தியா சுதந்திர போராட்ட ஸ்ரீ வீரர் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற்றது 

- Advertisement -

மாவீரர் அழகு முத்துக்கோன் வீரத்தின் வரலாறு பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும் – பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து

 

இந்தியா சுதந்திர போராட்ட ஸ்ரீ வீரர் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் இந்தியா சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்ரீ வீர அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா பாரதிய ஜனதா கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில், பாலக்கரை மண்டல தலைவர் அனிதா சசிகுமார் முன்னிலையில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்ரீ வீர அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா நடைபெற்றது, விழாவில் அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பார்த்திபன், பாரத முன்னேற்ற கழகத்தின் தலைவர் பாரதிராஜா, ஸ்ரீரங்கம் திருவேங்கடம், பாரதி ஜனதா கட்சியின் மண்டல பொருளாளர் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, இளைஞர் அணி நிர்வாகிகள் விஜி, விஜய் பிரசன்னா, மற்றும் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -

கூட்டத்தில் மாவட்ட தலைவர் உரையாற்றும் போது இந்தியா சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் அவர்களுக்கு நமது பாரத பிரதமர் தான் அஞ்சல் தலை வெளியிட்டார் ,

கோரிக்கையாக ஒன்றை வைத்துக் கொள்கின்றோம்

தமிழகத்தில் வரலாறு மறைக்கப்படுகிறது, அவர்களுக்கு தேவையான செயல்களை மட்டும் கொண்டு செல்கிறார்கள் அதை மாற்றி மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் வீரம் அனைவருக்கும் தெரிய வேண்டும் எனவே அவரின் வீரத்தின் வரலாறு பாடப்புத்தகத்தில் அவரது அத்தியாயம் இடம்பெற வேண்டும், மாணவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அரசுக்கு கோரிக்கையாக முன் வைக்கிறோம் என்று கூறினார் .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்