அருள்மிகு அடைக்காயி அம்மன் திருக்கோயில் மகா சண்டிஹோம விழா வெகு விமர்சியாக நடைபெற்றது

- Advertisement -

அருள்மிகு அடைக்காயி அம்மன் திருக்கோயில் மகா சண்டிஹோம விழா வெகு விமர்சியாக நடைபெற்றது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணிநிலையம் பகுதியில் அமைந்து அருள்பாலித்து வரும் வரகனேரி அம்பலம் பங்காளிகளுக்கு சொந்தமான அருள்மிகு அடைக்காயி அம்மன் திருக்கோயில் மகா சண்டிஹோம விழா வெகு விமர்சையாக நடைபெற்றது, இக்கோயில் மிகவும் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில், இல்லை என்று வருபவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அம்மன் அருள்மிகு அடக்காயி அம்மன் என்று பக்த கோடிகள் அனைவரும் பக்தியுடன் வந்து வழிபடும் கோவில், இரண்டு நாட்கள் தொடர்ந்து மகா சண்டிஹோம்
எல்லாம் வல்ல அன்னையின் திருவருள் துணை கொண்டு நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆனி மாதம் 26-ம் தேதி (10.07.2025) வியாழக்கிழமை பெளர்ணமி திதி, பூராடம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய நன்னாளில் காலை 8.30 மணிக்கு அருள்மிகு அடைக்காயி அம்மன் ஆலயத்தில் முதலாம் ஆண்டு மகா சண்டி ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சியில் பக்த பெருமக்களும், கிராம பொதுமக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்

 

- Advertisement -

ஆனி மாதம் 25ம் தேதி (09.07.2025)புதன்கிழமை காலை 9.00 மணிக்கு

அனுக்ஞை, மங்கல இசை,
ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து
மங்கள இசை, முதல் கால யாகபூஜை. ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், சப்தசதிதேவி மகாத்பியம்), பாராயணம், 64 யோகினி, 64 பைரவர், மூலமந்திரஹோமம். பூர்ணாஹுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது

ஆனி மாதம் 26ம் தேதி (10.07.2025) வியாழக்கிழமை இன்று காலை 8.30 மணிக்கு

மங்கள இசை, இரண்டாம் கால யாக பூஜை, வேதிகா அர்ச்சனை, சண்டி ஹோமம் ஆரம்பம், கோபூஜை, பிரம்மசாரி பூஜை, வடுக பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலிபூஜை. மங்கள திரவிய பட்டு புடவை சமர்ப்பணம், வஸோதார ஹோமம், மஹா பூர்ணாஹுதி, மகா அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது,
பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அதனைத் தொடர்ந்து கடம் அபிஷேகம், அலங்காரம் உடன் மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது
மகா சண்டி ஹோமம்
யாகபூஜை நடத்தி வைத்தவர்
திருவருட்செல்வர்” சிவஸ்ரீ தேஜோவிடங்க சிவாச்சாரியார் ஆவார்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்