ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

- Advertisement -

ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி மாவட்டம், செங்குறிச்சியைச சேர்ந்த பிரவின்குமார் என்பவர் கட்டிட மின் வயரிங் செய்பவர் ஆவார். இந்நிலையில் மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் புதிதாக வீடு கட்ட இருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்காக அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்ததன் பேரில், தற்காலிக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்ய மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் அருளாணந்தம் (வயது 48) என்பவரை கடந்த 8 ஆம் தேதி அணுகியபோது ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவீன் குமார், 9 ஆம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள், சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரனையில் வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்ச பணம் ரூ.10,000 த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்றபோது, கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக திருச்சி மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்