2026 தமிழக சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், தமிழ்நாட்டில் பெருபாலான தொகுதிகளில் போட்டி

- Advertisement -

2026 தமிழக சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், தமிழ்நாட்டில் பெருபாலான தொகுதிகளில் போட்டி

தமிழ்நாடு ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணி நந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில தலைமைப் பொதுச்செயலாளர் லட்சுமணன், ராஜகோபால், பாராளுமன்ற குழுத் தலைவர், மகேஷ்வரன், மாநில பொருளாளர் முன்னிலை வகித்தனர். மாநில மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார். கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள் முருகப்பன், பார்த்திபன், லையன் Dr. AD. விஸ்வநாத் அவர்கள் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் பொதுச் செயலாளர்கள் கரூர் பாண்டியன், ராமலிங்கம் மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள், அணித் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தார்கள். இறுதியாக திருச்சி மாவட்டத் தலைவர் செந்தில்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

- Advertisement -

1. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், தமிழ்நாட்டில் பெருபாலான தொகுதிகளில் போட்டியிடும். கூட்டணி அமைந்தால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது.

 

2. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

 

3. பீகாரில் மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள் முதன் முதலில் அமுல்படுத்திய சாதிவாரிய கணக்கெடுப்பைபோல், தமிழ்நாட்டில் சாதிவாரிய கணக்கெடுப்பை உடனடியாக நடத்தவேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

 

4. தமிழகத்தில் காவல்துறையின் அதிகார மீறலை நிறுத்தவேண்டும். பொதுமக்களிடம் நம்பிக்கைபெருமளவில் காவல்துறை நடக்கவேண்டும்.

 

5. அரசு நெல் கொள்முதல் செய்யும்போது, மிக பெரிய அளவில் குடோன்கள் நிரந்தரமாக கட்ட வேண்டும். இதனால் பெரிய அளவில் நெல் மழையில் நனையால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதை தடுக்கவேண்டும்.

 

6. தமிழகத்தில் இயங்ககூடிய தனியார் மது ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும் போதைக்காக அல்லாமல் மருத்துவ மற்றும் அறிவியல் காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

7. திருவண்ணாமலையில் தமிழக ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு சொந்தமான சுமார் 40000 சதுர அடி நிலத்தை பொய்பட்டா கொடுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் திமுக வின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது சம்பந்தமாக திருவண்ணாமலை காவல் துறைக்கு புகார் கொடுத்தும் CSR போடப்பட்டும் FIR போடப்படாமல் ஆக்கிரமிப்புக்கு காவல்துறையும் வருவாய் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழக ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள் மேற்படி சொத்தை அதே பாணியில் கைபெற வேண்டும் என தீர்மானம் போடப்படுகிறது. அதற்கான விளைவுகளுக்கு அரசே காரணமாகும். அராஜகமாக 60 ஆண்டுகள் அனுபவத்தில் இருந்த சொத்தை ஒரே நாளில் அரசியல் பலத்தோடு கைப்பற்றியிருப்பதை வன்மையாக கண்டித்து நடவடிக்க எடுக்கப்படும் என ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்