கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் நிதி உதவி

- Advertisement -

கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் நிதி உதவி

 

தமிழக முதலமைச்சர் கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

 

பதிவில்

- Advertisement -

கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, மாண்புமிகு அமைச்சர் @MRKPanneer மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் – பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என்று குறிப்பிட்டுள்ளார்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்