முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 11 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம்
முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 11 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம்
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு கிராம சுகாதார, செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பெருந்திரள் முறையீடு மற்றும் காத்திருப்பு போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. 3800 துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் கிராம சுகாதார செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்,
துணை சுகாதார நிலையங்களில் தற்காலிக பணியாளரை கொண்டு தடுப்பூசி போடும் ஆணையை ரத்து செய்ய வேண்டும், கருவுற்ற தாய்மார்கள் சுய பதிவு செய்ய வேண்டியதை கிராம சுகாதார அலுவலர்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர் காயத்ரி தேவி தலைமையில் நடைபெற்ற இந்த பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



பின்னர் மாவட்ட தலைவர் காயத்ரி பேசுகையில்,…
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பெருந்திரள் முறையீடு நடைபெற்று வருகிறது. 3800 காலிப்பணியிடங்கள் இன்று வரை நிரப்பப்படாமல் உள்ளது. அடித்தட்டு மக்களாகிய கிராம சுகாதார செவிலியர்களை, அந்த பணியிடங்களில் நிரப்ப வேண்டும். துணை சுகாதார நிலையங்களில், தடுப்பூசி போடும் பணியை தற்காலிக பணியாளர்களை கொண்டு போடலாம் என்ற ஆணையை ஏத்து செய்ய வேண்டும். வாடகையற்ற குடியிருப்புகள் அனைவருக்கும் வழங்க வேண்டும். தற்போது தொடங்கப்பட்டுள்ள health and wellness center இல் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லை. அதற்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். ஆண் பணியாளர்களுக்கு கிரேடு 2 வழங்கி, 5 முதல் 8 வருடங்களில் கிரேடு 1 வழங்கியுள்ளார்கள். அதை போல பெண் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கையாக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 11 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.





Comments are closed.