அதிமுக சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பி.கே.வைரமுத்து தொடங்கி வைத்தார்

- Advertisement -

அதிமுக சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பி.கே.வைரமுத்து தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டியில் இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த இருதய சிகிச்சை முகாமை முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவரும், புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் குழிபிறை பாண்டியன் முன்னிலை வகித்தார்.

- Advertisement -

இந்த முகாமில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கலந்து கொண்டனர், இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் மனோஜ் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் அன்பழகன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு இசிஜி எக்கோ ஸ்கேன் மற்றும் ட்ரெட்மில் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோனாபட்டு மணிகண்டன், முன்னாள் திருமயம் நிலவள வங்கி தலைவர் சிவகுமார், கோட்டூர் கூட்டுறவு சங்கத் தலைவர் முன்னாள் தலைவர் குமரேசன், குழிபிறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஹ்ருதயா மருத்துவமனை பனையப்பட்டி நலம் கிளினிக் அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த இருதய மருத்துவ முகாமில் மருத்துவமனையின் மக்கள் செய்தி தொடர்பாளர் திருமேணிநாதன் ஒருங்கிணைத்தார்..

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்