இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 43 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்

- Advertisement -

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 43 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்

 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர்
மாவட்டங்களை உள்ளடக்கிய 43 ஜோடிகளுக்கு அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

- Advertisement -

திருமண ஜோடிகளுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகள் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பிரகாஷ், மண்ணச்சநல்லூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சீதா இளங்கோவன், அறங்காவலர்கள்,
ச. கண்ணனூர் பேரூராட்சி தலைவர் சரவணன், செயல் அலுவலர் கணேசன், கோவில் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை திருச்சி மண்டல் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர் லட்சுமணன், உமா, அறநிலையத்துறை ஆய்வாளர் கோகிலா வாணி, கோவில் செயல் அலுவலர்கள் ஜெய்கிஷன், ராகினி, வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மணமக்களுக்கு கட்டில், மெத்தை, தலையணை, வெள்ளியில் மெட்டி, பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களும், ஒரு மாத மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது. திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்கள் சுமார் 500 பேருக்கு இரவு டிபன், காலை சிற்றுண்டியும், திருமணம் முடிந்ததும் வடை பாயாசத்துடன் உணவு விருந்தும் வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்