திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் தமிழ் உணவுத் திருவிழா – விரும்பி ருசித்து ரசித்து சாப்பிட்ட பொதுமக்கள்!

- Advertisement -

திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலின் ‘தி தக்க்ஷின் நக்ஷத்திரா’ ரெஸ்டாரண்டில் தமிழ் உணவு திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 6 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உணவு திருவிழாவில், தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளான நீர் ஆகாரம், கம்மங் கூல், கேப்பக் கூல், கொளுக்கட்டை, தேனும் தினைமாவு உருண்டை வரகு அரிசி வடை, சாமை பொங்கல், சோள பணியாரம் கருப்பு கவுலி பாயாசம், சிகப்பு அரிசி பட்டு மற்றும் இன்றைய கால பிரசித்தி பெற்ற உணவான ஆம்பூர் மட்டன் பிரியாணி, காரைக்குடி சிக்கன் குருமா, சிதம்பரம் இறால் சுக்கா, குற்றாலம் சிக்கன் வறுவல், புதுக்கோட்டை முட்டை மாஸ், இராமேஸ்வரம் மீன் குழம்பு மற்றும் இனிப்பு வகைகள், கார வகைகள் உள்ளிட்ட உணவு வகைகள் இடம் பெற்றுள்ளது.

எஸ்.ஆர்.எம் ஹோட்டலின் மாஸ்டர் செஃப் P. ரோஜசிவநேசன், செஃப் சீனிவாசன் மற்றும் சக சமையல் கலைஞர்கள் குழுவாக சேர்ந்து இந்த தமிழ் உணவின் சுவைகளுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கி உள்ளனர். இந்த உணவுத் திருவிழா தமிழ்நாட்டின் ஏராளமான மாவட்டத்தில் இருந்து பிராந்திய பிரசிந்தி பெற்ற உணவுகளின் சுவைகளை நீங்கள் உள்ளூரிலே, சுவைக்கும் வகையில் அமைந்துள்ளது.

“தி தக்ஷின் நக்ஷத்திரா” ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரெண்ட்” அதன் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தி, மெனுவில் பல்வேறு ஊரும், உணவும், வகைகளின் கலவையை, ஒரே இடத்தில் வழங்குகிறது. ஒவ்வொரு உணவின் கலையும், ரசனை மொட்டுக்களை தூண்டுகிறது மற்றும் உங்கள் ஆவலைத் தூண்டும் வகையில் தரம் மறக்க முடியாத நினைவலைகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. உங்களை ஈர்க்கக் கூடிய மற்றும் நோக்கத்துடன் தயாரிப்பது மட்டும் இல்லாமல், தனிப்பயணக்கப்பட்ட உணவு அனுபவத்தை உருவாக்கும் நோக்கத்துடன் “தக்ஷின் நக்ஷத்திரா” வழங்குகிறது.

- Advertisement -

இந்த உணவு திருவிழா குறித்து எஸ்.ஆர்.எம் ஹோட்டல் பொது மேலாளர் பிரதீப் கிருஷ்ணா கூறுகையில்,… “இத்திருவிழா” கொண்டாட உங்களுக்கு உதவும் வகையில் உணவுப் பொருட்கள் அலங்காரம், ஊழியர்களின் உடைகள் மற்றும் இசை ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு சுவைகளுடன் சங்கமம் செய்து ஒரு தெய்வீக உணவு சுவைகளை அளிக்கிறது. நிஜமான பழங்கால தமிழ் உணவு எங்கள் விருந்தினர்கள் சுவையை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக தயாரிக்கப்பட்ட உணவுக்கான அனைத்து பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள், திருச்சி மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்