திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 27-ம் ஆண்டு விளையாட்டு விழா!

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 27 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் முகமது யூனிஸ் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் நவீன் சேட் கல்லூரி கொடியை ஏற்றி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற, சர்வதேச நீளம் தாண்டுதல் வீரர் பிரேம்குமார் கலந்துகொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து விளையாட்டு சுடர் ஏற்றப்பட்டு, உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கல்லூரியின் இணை பேராசிரியர் தண்டாயுதபாணி விளையாட்டுப் போட்டிக்கான ஆண்டறிக்கை வாசித்தார். அதனை தொடர்ந்து ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

- Advertisement -

மேலும் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் தலைவர் கட்டண சலுகைக்கான காசோலையை வழங்கி பாராட்டினார். மேலும் இந்த விளையாட்டு போட்டியில் ஊதா நிற அணியினர் கல்லூரி கோப்பையை வென்றனர். இதில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்