கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 போதை இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இருவர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

Bismi

இந்நிலையில், இன்று பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் இரண்டு பேர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது குற்றவாளிகள் கத்தியால் தாக்கியதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.
பின்னர் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தப்பி செல்ல முயன்ற நாராயணனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்