ஸ்ரீரங்கத்தில் தொழில் முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டம் அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் ராஜன் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது

- Advertisement -

திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் தொழில் முனைவோர், வேலை வாய்ப்பு, கல்வி வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்
ஸ்ரீரங்கத்தில் நடந்தது. திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் தலைவர் எஸ். ராஜன் பிரேம் குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிவசக்தி கணேசன், செயலாளர் பால கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஜே.கே.சி. நிறுவனத் தலைவர் ஜான் ராஜ் குமார், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் மணி பிரகஸ்பதி, பேராசிரியர் பாரூக் உசேன், தன்னார்வலர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தொழிலை விரிவாக்கம் செய்வது, டிஜிட்டல்
உலகில் இருக்கும் பிரகாசமான தொழில் வாய்ப்புகள் குறித்து உரையாற்றினர். மேலும் குறைந்த அளவு உற்பத்தியும், அதிக தேவையும் இருக்கும் ரியல் எஸ்டேட், தங்கம் உள்ளிட்ட சில தொழில்களை தேர்ந்தெடுத்து செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என
ஆலோசனை வழங்கினர்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் சங்க பொதுச் செயலாளர் ஞானகுமார் கலந்து கொண்டு சிறு குறு தொழில் முதலீடுகளுக்கு, மத்திய மாநில அரசுகள் வழங்கும் கடன் திட்டங்கள் சலுகைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
இதில் ஒருங்கிணைப்பாளர் கே.கே. நகர் செந்தில்குமார்,
அமைப்பு செயலாளர் கோயில் பிச்சை, ஆலோசகர் மெடிக்கல் பழனி, துணை தலைவர் பொன். தமிழரசன், ஸ்ரீரங்கம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் ஜெய்சங்கர், அமைப்புச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,
அண்ணா நகர் பகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, தில்லை நகர் பகுதி பொறுப்பாளர் அபிராமி சுப்பிரமணியன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் அன்சார் முகமது நன்றி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்