திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில், சமயபுரம் மாரியம்மனுக்கு  சீர்வரிசை!

- Advertisement -

சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கை. இதனால் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அவருக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அடங்கிய சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகிகளிடம், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகிகள் நேற்று இரவு 12 மணியளவில் வழங்கினர்.

இதையடுத்து அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் சார்பில் வழங்கப்பட்ட பட்டுவஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப் பொருட்களுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்