திருச்சி மாநகராட்சி 21 வது வார்டில் சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, திருச்சி மாநகராட்சி 21 வது வார்டு நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் இருக்கக்கூடிய பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றப்படாமல் இருப்பதால் பல்வேறு தொற்று நோய்களால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,,,
கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் துர்நாற்றம், தொற்று நோயால் பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். இந்தப் பகுதிக்கு தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்பதற்காக மட்டுமே தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வந்தார். வெற்றி பெற்ற பிறகு இதுவரை எங்களை வந்து சந்திக்க வில்லை. இதே போல்தான் இந்த வார்டு கவுன்சிலரும் உள்ளார். எங்களுடைய வாக்குகள் மட்டும் அவர்களுக்கு தேவை நாங்கள் தேவை இல்லை. இந்த ஆட்சியில் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் வருகின்ற தேர்தலில் யார் வாக்குகள் கேட்டு வந்தாலும் நாங்கள் புறக்கணிப்போம் என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
Comments are closed.