ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா – ரங்கா ரங்கா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் தைத்தேர் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தைத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழா தொடங்கி ஒவ்வொரு நாட்களிலும் காலை மற்றும் மாலை வேளையில், நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள் திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

- Advertisement -

இந்த தைத்தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தைத்தேர் உற்சவம் காலை விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.30 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திரவீதிகள் வழியாக காலை 9.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்