- Advertisement -

டில்லி சட்டசபை தேர்தலில்,வி.ஐ.பி., வேட்பாளர்கள் நிலை

- Advertisement -

புது டில்லி தொகுதி

இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோர் களம் இறங்கினர்.

அரவிந்த் கெஜ்ரிவால் 6,442 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மா 6,099 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித் 1,092 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

ஜங்புரா தொகுதி

இந்த தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில், மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் கர்தார் சிங் தன்வார் போட்டியிட்டார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மணீஷ் சிசோடியா 2800 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ., வேட்பாளர் 4,114 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

Vagai
Bismi

மால்வியா நகர் தொகுதி

இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில், மூத்த தலைவர் சோம்நாத் பாரதி போட்டியிட்டார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் சதீஷ் உபாத்யாய், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜிதேந்திர குமார் கோச்சார் ஆகியோர் போட்டியிட்டனர். பா.ஜ., வேட்பாளர் சதீஷ் உபாத்யாய் 9,205 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். ஆம்ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பாரதி 7,805 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

கல்காஜி தொகுதி

இந்தத் தொகுதியில் தற்போதைய டில்லி முதல்வர், அதிஷி ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும், பா.ஜ., சார்பில் முன்னாள் எம்.பி., ராமேஷ் பிதூரியும் போட்டியிட்டனர். ஆம்ஆத்மி வேட்பாளர் அதிஷி 7,465 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா 782 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். பா.ஜ., ராமேஷ் பிதூரி 8,807 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

சத்தர்பூர் தொகுதி

இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் பிரம் சிங் தன்வார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் கர்தார் சிங் தன்வார் களத்தில் இறங்கினார். காங்கிரஸ் சார்பில் ராஜேந்தர் சிங் தன்வார் போட்டியிட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் பிரம் சிங் தன்வார் 15740 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். பா.ஜ., வேட்பாளர் கர்தார் சிங் 22658 ஓட்டுக்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 1,231 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்