திருச்சி தென் சீரடி சாய்பாபா கோவில் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞனை தர்ம அடி கொடுத்து கையும் களவுமாக பிடித்த ஊர் பொதுமக்கள்- இளைஞனை மீட்க சென்ற காவல் துறை வாகனத்தின் கண்ணாடி உடைப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி என்ற பகுதியில் தென் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது,
இதன் சுற்றுப்பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து வழிப்பறி நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சிறுகனூர் காவல் நிலையத்தில் சுற்றுவட்டார பகுதி மக்கள் புகார் அளித்து உள்ளனர், நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் சாய்பாபா கோவில் அருகே உள்ள வாரி பகுதியில் சாலையோரத்தில் பதுங்கி நின்று கொண்டிருந்த இளைஞர்களை, அப்பகுதி கிராம பொதுமக்கள் அவர்களை கையும் களவுமாக பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பிய நிலையில், திருவானைக்காவல் வடக்கு 5ம் பிரகாரம் பகுதியை சேர்ந்த பரத்குமார் வயது 24 என்ற இளைஞரை மட்டும் பிடித்து தர்ம அடி கொடுத்து அக்கரைப்பட்டி ஊர் பகுதியில் உள்ள கோவில் சாவடியில் அடைத்து வைத்துள்ளனர்,
அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவத்தை சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி உள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்பாகவே, அக்கரைப்பட்டி சுற்றுப்பகுதியில் உள்ள தேவி மங்கலம், ஆயக்குடி, வங்காரம், கருங்காடு, அய்யம்பாளையம், நாடார்பாளையம், எஸ்.புதூர் போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சம்பவ இடத்தில் குவிந்த நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது,
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் இளைஞனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது,அப்பகுதியில் இருந்த மக்கள் ஒன்று திரண்டு, இவன் உங்களிடமிருந்து எளிமையாக தப்பித்து விடுவான் இவனை விடக்கூடாது என்ற குரல் எழுப்பியவாறு, அழைத்துச் செல்ல வழிவிடாமல் அந்த இளைஞனுக்கு மீண்டும் தர்ம அடி கொடுத்துள்ளனர், அப்பகுதியில் கூடியிருந்த மக்கள். இதனால் காவல்துறையினருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், இளைஞனை மீட்டு காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் பொழுது கூடியிருந்த மக்கள் அனைவரும் வாகனத்தை மறித்து முற்றுகையில் ஈடுபட்ட பொழுது காவல்துறையின் வாகனத்தின் பின்புறம் கண்ணாடி உடைந்தது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.