- Advertisement -

திருச்சியில் DMC புதிய பல் மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்த விஜய் டிவி புகழ்!

- Advertisement -

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல் மருத்துவமனையை நடிகர் “விஜய் டிவி புகழ்” இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்..

திருச்சியில் 4 வது DMC பல் தொடர்பான சிகிச்சை அளிக்கும் மையத்தை தொடங்கி வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எப்போது திருச்சிக்கு வந்தாலும், இவர்களின் கிளினிக்கில் தான் சிகிச்சை பெறுவேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்குப் பிறகு தினந்தோறும் எனது அலுவலகத்தில் 50 நபர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வருகிறேன். இன்றுடன் 374 நாட்களாக உணவு அளித்து வருகிறேன் இதை நான் தொடர்ந்து செய்வேன். இது போன்று மற்ற மாவட்டங்களிலும் செய்வதற்கு வாய்ப்பு இருந்தால் நிச்சயம் செய்வேன்.

Vagai

திருச்சி என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும், உணவை பொறுத்தவரை நான் சைவம், அசைவம் என்று அனைத்தையும் சாப்பிடுவேன். தற்போது புதிதாக ஒரு வெப் சீரிஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன். அதனைத் தொடர்ந்து இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். குறிப்பாக கோலி சோடா பார்ட் 2 எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Bismi

திரை உலகில் நடிகன் என்று வந்தாலே அனைத்து கதாபாத்திரங்களும் நடிக்க வேண்டும். குறிப்பாக நான் நடித்த கோலிசோடா படத்தில் வில்லனாக என்னை அறிமுகம் செய்து, எனக்கு ஊக்கம் கொடுத்த விஜய் மில்டன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

*திரை உலகத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்ற கேள்வி??*

நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கே எனது மனைவியிடம் அனுமதி கேட்டு தான் வந்தேன் விரைவில் இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு புறப்பட்டு விடுவேன்.

*நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் புகழ்..*

அரசியலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது நான் சின்ன பையன் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்