காது மூக்கு தொண்டை சிகிச்சையில் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை புதிய சாதனை!
திருச்சி தில்லைநகர் 3 வது கிராசில் செயல்பட்டு வரும் ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜானகிராம் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்…
திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது மூக்கு தொண்டையில் ஓர் மிகப்பெரும் புதிய சாதனை புரிந்துள்ளது . ராயல் பெர்ல் மருத்துவமனையில் என்னிடம் சிகிச்சை பெற பல நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சந்திக்க வருவது எல்லோரும் அறிந்ததே. நான் அமெரிக்க நாட்டில் காது மூக்கு தொண்டை மற்றும் SKULL BASE அறுவை சிகிச்சை பயிற்சி பெற்று பல நாடுகளில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து உள்ளேன். தற்போது நான்கு நாட்களுக்கு முன்பு சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து அகர்வால் (27 வயது) என்ற ஆண் நோயாளி மயக்க நிலை அடைந்து மூளையில் அடிபட்ட நிலையில் அந்த மாநிலத்திலே ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு உள்ள மருத்துவமனையில் இருக்கும் நரம்பியல் மற்றும் காது மூக்கு அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சியில் இருக்கும் ராயல் பேர்ல் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு நோயாளியின் உறவினர் மூலம் கலந்துரையாடப்பட்டது.
ஆனால் நோயாளி மயக்க நிலையில் இருந்ததால் ரயில் மூலமாகவோ விமானம் மூலமாகவோ வர இயலாது. எனவே தனி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சியில் இருக்கும் ராயல் பேர்ல் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள். உடனடியாக நான் டாக்டர் ஜானகிராம் (ENT SURGEON), டாக்டர் விஜயகுமார் (NEURO SURGEON), டாக்டர் பாலமுருகன் ((ANEASTHETIST), டாக்டர் கணேஷ் (EYE SURGEON), டாக்டர் விக்னேஷ்வர் (ENDOCRINOLOGIST), டாக்டர் ஜெயசங்கர் (CARDIOLOGIST), டாக்டர் சந்திரசேகர் ( NEURO SURGEON), டாக்டர் சில்பி (ENT), டாக்டர் மானசி (ENT) ஆகியோர் பரிசோதனை செய்து அவசர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மறுநாளே மயக்க நிலையில் இருந்து மீண்டு, தற்போது நோயாளி நலமுடன் உள்ளார். மீண்டும் அவரது மாநிலத்திற்கே மிகவும் மகிழ்ச்சியுடன் நலமுடன் செல்ல இருக்கிறார் என தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது மருத்துவமனை சி.இ.ஓகள் சோமசுந்தரம், வியாகுலமேரி உடன் இருந்தனர் .
பேட்டியின் முடிவில் அகர்வால் உறவினர்கள் கூறும் போது… டாக்டர் ஜானகிராம் காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவத்துறையில் நம் இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் உலகப்புகழ் பெற்று செயல்பட்டு வருகிறார் என பாராட்டி பேசினர் .
Comments are closed.