சாதி மோதலை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் கமிஷனரிடம் கோரிக்கை மனு!

திருச்சி மாவட்ட தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் அமைப்பாளர் ரவிசங்கர் தலைமையில் வழக்கறிஞர்கள் முத்துவேல், எம்.ஜி.ராஜசேகர், புத்தூர் ராஜமாணிக்கம், மல்லை சுரேஷ், கார்த்திகேயன், தர்மா, கேசவமூர்த்தி ஆகியோர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

- Advertisement -

தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக தேவேந்திர குலத்தை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு தேவேந்திர திருமகனார் இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதென சட்டசபையில் தீர்மானம் இயற்றி அதன் வேலைகளும் பெரும் பகுதி நிறைவடைந்த நிலையில் காழ்ப்புணர்ச்சியுடன் மணிமண்டபம் கட்டக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் சாதி மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடையாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்