தொழிற்சாலை நிர்வாகங்களில் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி பயிற்சி குறித்த ஒருநாள் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது!

திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மென்ட் சென்டர் ஃபார் ஹெல்த் கேர் சார்பில் தொழிற்சாலை நிர்வாகங்களில் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி பயிற்சி குறித்த ஒருநாள் கருத்தரங்கம் திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலுதவி, பாதுகாப்பு பயிற்சி மற்றும் தொழிற்சாலைகளில் சட்டத்தின் கீழ் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

- Advertisement -

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் திருச்சி மண்டல கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து, துவக்க உரையாற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக டெவலப்மென்ட் இயக்குனர் டாக்டர் சுகன் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து டாக்டர் அசோக் பாண்டியன், விளையாட்டு பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சான்றளிக்கும் மருத்துவர் டாக்டர் மதுசூதனன், டி.என்.பி.எல் நிறுவனத்தின் டாக்டர் ராஜா, பி.எச்.எல் நிறுவனத்தின் டாக்டர் ராஜ்குமார், பாரத் லிமிடெட் இன் ஜெனரல் மேனேஜர் சேஃப்டி துரைராஜ், என்எல்சி நிறுவனத்தின் டாக்டர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் கூடுதல இயக்குனர் சித்தார்த்தன், ஆத்மா மருத்துவமனை திருச்சி மேனேஜிங் டைரக்டர் டாக்டர் ராமகிருஷ்ணன், நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் டாக்டர் புகழேந்தி, சதர்ன் ரயில்வே சென்ட்ரல் ஒர்க் ஷாப் சீப் சேஃப்டி ஆபீஸர் டாக்டர் கே.எஸ்.நாராயணன், அசிஸ்டன்ட் டிஸ்ட்ரிக்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை திருச்சி மாவட்ட அலுவலர் லியோ ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சாலைகளில் தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் இதர தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி மற்றும் உடல்நலம், தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் குறித்து அளிக்க வேண்டிய வழிமுறைகள், பயிற்சி அளிக்க வேண்டிய வழிமுறைகள், ஆபத்தான தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், தீ தடுப்பு மற்றும் பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள், மேற்படி பயிற்சிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏ.ஆர்.வி.ஆர் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள், தொடாத நோய்கள் தடுக்கும் வழிமுறைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் மருத்துவ அலுவலர்கள் ஆகியோருக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும் இந்த கருத்தரங்கில் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சாலைகளின் பாதுகாப்பு அலுவலர்கள், மனித வள மேம்பாட்டு அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், பொதுமக்கள் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மேலும் இந்நிகழ்வில் திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநர்கள் புகழேந்தி, மாலதி, விமலா, சித்ரா மற்றும் துணை இயக்குனர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் மேலாளர் நன்றியுரை வழங்கினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்