திருச்சியில் தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!
திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில், மேலகல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள மளிகை கடையில், போலீசார் முன்னிலையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து 65 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ரமேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் மேலகல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு பகுதியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் சுடலை மணி (வயது34) என்பவரை பொன்மலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கந்தவேல் , இப்ராஹிம், மகாதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.