உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்க வேண்டும் . திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்.

0

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை அமைச்சராக்க வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சரும்,தெற்கு மாவட்ட கழக  பொறுப்பாளருமான அன்பில் மகேஸ்  பொய்யாமொழி   தலைமையில்  ஜூன் – 3ந் தேதி  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கழககொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், கழக ஆக்கப்பணிகள். குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் , கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன்,  செந்தில் மற்றும்
மாநில,மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,பகுதி, நகர,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,  ஒன்றிய குழுதலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை  அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்