- Advertisement -

குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார்.

0

- Advertisement -

ஜப்பானில் நடக்கும் ‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் மாநாட்டில்
இடம் பெற்றுள்ளன,
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு இரண்டாவது குவாட் மாநாடு வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடைபெற்றது.
இந்நிலையில், மூன்றாவது குவாட் மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை மறுதினம் நடைபெற உள்ளதால். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  குவாட் மாநாட்டில் பங்கேற்க  இன்று இரவு புறப்பட்டு ஜப்பானுக்கு செல்கிறார். 

Bismi
Vagai

ஜப்பானில் 40 மணி நேரம் தங்கியிருக்கும் பிரதமர் மோடி குவாட் மாநாட்டில் பங்கேற்பதுடன், ஜப்பான் பிரதமர் கிஷிடா, அமெரிக்க அதிபர்
ஜோ பைடன் ஆகியோரை தனித்தனியே சந்தித்து, இரு தரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார்.அத்துடன், 40க்கும் அதிகமான ஜப்பான் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்தித்து அவர்களை இந்தியாவில் முதலீடு செய்யஅழைப்பு விடுக்கிறார் பிரதமர்.உக்ரைன் – ரஷ்யா விவகாரம் பற்றிதான், குவாட் மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிலிருந்து நாளை மறுதினம் இரவு தாயகத்துக்கு திரும்புகிறார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்