பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பணவீக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனில் அக்கறைகாட்டி வருகிறது. இதன் விளைவாக, பாஜகவின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் சராசரி பணவீக்கம் முந்தைய அரசாங்கங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதாக கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோலை பொறுத்தவரை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயையும் குறைத்துள்ளோம். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனில் அக்கறைகாட்டி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.