முதலமைச்சர் கோப்பைககான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

Bismi

இந்நிகழ்வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்