திருச்சி செங்குளம் காலனியில் ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டிடத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து திருச்சி செங்குளம் காலனியில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து புதிய அலுவலக கட்டடத்தினை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில், மண்டலத்தலைவர் மதிவாணன், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார், கண்காணிப்பு பொறியாளர் (நடுகாவிரி வடிநில வட்டம்) சிவக்குமார், செயற்பொறியாளர் (தரக்கட்டுப்பாட்டுக் கோட்டம்) புகழேந்தி, உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், ஜோதி, உதவி பொறியாளர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.