ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை
விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.
31 ஆண்டு நடந்த சட்ட போராட்டத்தின் வெற்றியும், பேரறிவாளன் தாயாருடைய கண்ணீரும் அவரை மீட்டு இருக்கிறது என்று சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 7 பேர் தொடர்ந்து 31 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். அதற்கு பல்வேறு சட்ட போராட்டங்கள், பல்வேறு அமைப்புகள் முன்னிறுத்தி வழக்குகள் நடைபெற்று வந்தது. குறிப்பாக தமிழக அரசு, முன்னாள், இந்நாள் அரசு இரண்டும் அவர் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருந்தபோதிலும் இறுதியாக கவர்னர், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு இன்றைக்கு இந்த சட்டப் போராட்டம் என்பது 31 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. பேரறிவாளன் விடுதலை செய்வது குறித்த வழக்கு இந்தியாவில் மிகப் பிரபலமான ஒரு வழக்கு. அந்த வழக்கு இன்றைக்கு நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கு என்பது அவர் குற்றம் செய்தவரா, அல்ல செய்யாதவரா என்பது சட்டத்தின் அல்ல.10 குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கக் கூடாது என்பது சட்டத்தின் நீதியாகும். அதேபோல இயலாமையால் நீதி மறுக்கக்கூடாது. அதேபோல ஒரு மகனுடைய விடுதலைக்காக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளை முன்னிறுத்தி பல சட்ட போராட்டங்களை செய்திருக்கிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் தன்னுடைய மகனை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதுபோல ஒவ்வொரு கட்டத்திலும் அவர் போராடியிருக்கிறார். தன் மகனுக்காக அந்த தாயாருடைய கண்ணீர் பேரறிவாளனுக்கு விடுதலை பெற்று தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதேபோல சட்டம் தன் கடமையை செய்யும் என்று என்பது போல சட்டத்தின் ஆட்சி சட்டத்தின் மாண்பு நிலைநாட்டப்பட்டு பேரறிவாளன் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். உண்மையிலேயே இது பெரிய ஒரு வழக்கு. மிகப்பெரிய தீர்ப்பு. இது எல்லாரும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஒரு செய்தி. எனவே அவரது விடுதலை சட்டத்தின் படி நடைபெற்றது என்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.