தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில பொருளாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 2000 கோடி நிதியை மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி பங்கீட்டினை உரிய முறையில் வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதை கண்டித்தும், தமிழக பள்ளி கல்வித்துறைக்கு வரவேண்டிய கடைசி தவணையான 249 கோடியை வழங்க கோரியும், மத்திய அரசு இனியும் காலம் தாமதம் செய்யாமல் நிலுவைத் தொகையினை தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Comments are closed.