போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர் தொழிலதிபர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், கிளைச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்று பேசினர். கோரிக்கைகள் குறித்து போயர் சமுதாயப் போராளி தேக்கமலை விளக்க உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் ராஜ், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட துணை தலைவர் சின்னச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் இவ்விழாவில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது….போயர் சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். குறிப்பாக நல வாரியம் அமைக்க பரிசீலனை செய்யப்படும். மேலும் முதலமைச்சரிடம் சங்க நிர்வாகிகளை அழைத்துச் சென்று அவரிடம் சந்தித்து பேசி கோரிக்கை மனு வழங்க வழிவகை செய்கிறேன். எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் உங்களைப் போன்ற சமுதாய மக்களுக்கு நிச்சயம் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று பேசினார்.
மேலும் விழாவில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, திருச்சி மாநகர திமுக செயலாளர் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் கவுன்சிலர் முத்துச்செல்வம், அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், காஜாமலை பகுதி திமுக செயலாளர் கவுன்சிலர் காஜாமலை விஜய், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Comments are closed.