திருச்சி மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டங்கள் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது!

திருச்சி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் கூட்டங்கள் வட்டம் வாரியாக வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளன.

திருச்சி கிழக்கு வட்டத்துக்கு பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் தலைமையில் அய்யப்ப நகா் ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

திருச்சி மேற்கு வட்டத்துக்கு திருச்சி வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் சண்முகா நகா் கீழத்தெரு ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

திருவெறும்பூா் வட்டத்துக்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தலைமையில் எழில்நகா் ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

ஸ்ரீரங்கம் வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தலைமையில் புங்கனூா் ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

மணப்பாறை வட்டத்துக்கு ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் இனாம்புதூா் ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

- Advertisement -

மருங்காபுரி வட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தலைமையில் அய்யன்புதுப்பட்டி ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

லால்குடி வட்டத்துக்கு லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் மணக்கால் ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

மண்ணச்சநல்லூா் வட்டத்துக்கு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் தலைமையில் பீரங்கிமேடு ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

முசிறி வட்டத்துக்கு முசிறி வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் தண்டலை ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

துறையூா் வட்டத்துக்கு கலால் உதவி ஆணையா் தலைமையில் கலிங்கமுடையான்பட்டி ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

தொட்டியம் வட்டத்துக்கு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில் அக்ரஹாரம் ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.

இக்கூட்டங்களில் பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர கோரிக்கைகளை தெரிவித்துப் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்