பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாநகராட்சி முழுவதிலும் உள்ள தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டையை அவர்கள் நடத்தும் கடை முன்பு போட்டோ எடுத்து வழங்க வேண்டும், தரைக்கடை வியாபாரம் செய்யாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கூடாது, ஒருவர் கூட விடாமல் முழுமையாக அடையாள அட்டை வழங்கி வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும், வியாபாரிகள் சங்கங்களை அழைத்து பேசிய பிறகே வெண்டிங் கமிட்டி தேர்தல் அறிவிப்பு செய்திட வேண்டும், வியாபாரிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வியாபாரிகளுக்கு ஓய்விடம் வழங்கிட வேண்டும், சாலையோர வியாபாரிகளை சட்டத்திற்கு விரோதமாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும், அனைத்து வியாபாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டி வழங்கிட வேண்டும், நகர வெண்டிங் கமிட்டியில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, சி.ஐ.டி.யு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவ்ட்ட பொருளாளர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Comments are closed.