மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ₹.100.54 கோடி கடன் உதவி வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கும் விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 1189 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 100.54 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கி, மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

- Advertisement -

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் சரவணன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் சுரேஷ் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்