திருச்சி சுந்தர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்!

திருச்சி உறையூர் வைக்கோல்காரத் தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவிநாயகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு முதலாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணி முதல் 10.15 மணிக்குள் யாகசாலையில் இருந்து மேலதாள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுந்தர விநாயகர் கோவில் விமான கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பெரிய மாரியம்மன் கோவில் சேவா சங்க விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்