தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட்டால் நிதியை உடனடியாக விடுவிப்போம் என ஒன்றிய அரசு கூறுகிறது – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடுதல் விழா திருச்சி சிந்தாமணியில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயிற்சி சான்றிதழ் வழங்கி, கட்டகம் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

ஒருங்கிணைந்த கல்வியின் மூலமாக ஒவ்வொரு வருடமும் அதற்கான நிதியை 60% ஒன்றிய அரசு வழங்கிக் கொண்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நிதி என்பது 2152 கோடி. அதன் முதல் தவணை 573 கோடியை ஜூன் மாதம் வழங்க வேண்டும. இதுவரை வழங்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித் தரமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இந்த ஸ்கீமில் பணியாற்ற கூடிய ஆசிரியர்களுடைய நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுவரை இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒன்றிய அமைச்சர் இல்லத்தில் சென்று கருத்துகளை தெரிவித்தோம். அதேபோல நாடாளுமன்ற தேர்தல் முடிந்தும் நேரடியாக சென்று ஒன்றிய அமைச்சரை பார்த்தோம். புதிய கல்வி கொள்கையில், கையெழுத்திட்டு கொடுத்தால் உடனடியாக பணத்தை தருகிறோம் என கூறினார்கள். மேலும் மும்மொழி கொள்கை குறித்து பேசினோம், அதனை பின்னர் பேசிக்கொள்ளலாம் என அனுப்பி வைத்து விட்டனர். மும்மொழியை ஒற்றுக்கொண்டால் தான் நிதி தருவோம் என்ற நிலைமையில் உள்ளது. முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி எங்கள் நடவடிக்கை இருக்கும் என கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்