வாக்கு வங்கியை பலப்படுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி – தெலுகு சமுதாய அமைப்பினர் அறிவிப்பு!

தமிழ்நாடு தெலுங்கு சமுதாய அமைப்புகள் மற்றும் நாயுடு ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நிக்கசி திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைப்பின் பொதுச் செயலாளர் அனந்தராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில்….

- Advertisement -

விகிதாச்சார இடஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய தமிழகத்தில் சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான மத்திய அரசின் டபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டை மாநில அரசு அமல்படுத்த வேண்டும். தெலுங்கு மொழி சிறுபான்மை சான்றிதழ் பெறுவதில் தமிழக அரசின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால், பல்வேறு மாவட்ட தாசில்தார்கள் இடையூறு தருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும். ராணி மங்கம்மாள் பெயரை மதுரை தமுக்கம் மைதானத்திற்கு வைக்க வேண்டும் என்று பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்துள்ளோம். அது அரசின் காதுகளில் விழவில்லை. மொழிவழி சிறுபான்மையினர் ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், மொழி சிறுபான்மையினரை பிரித்தாளும் வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது குறித்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலுங்கு மக்கள் பற்றி சீமான் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். திருச்சியில் ராணி மங்கம்மாளுக்கு சிலை வைக்க வேண்டும். தமிழகத்தில் 30 சதவீதம் தெலுங்கு மக்கள் உள்ளனர். அரசியல் சாசன சட்டப்படி எங்களுடைய கோரிக்கைகளை நீதித்துறை மூலமாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு மக்களை ஒன்றிணைத்து வாக்கு வங்கியை பலப்படுத்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்