திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது – ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்க தலைவர் கைது!

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவெறும்பூா், லால்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 27 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு அறிவித்து இருந்தது. இந்த தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி, பல்வேறு கிராமப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதொடா்பாக திருச்சி ஆட்சியரிடம் மனுக்கள் அளித்தும் வருகின்றனா். இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை, திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வாயிலில் தண்ணீா் அருந்தா தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று காலை தொடங்கினாா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், ஆட்சியரக வளாகம் மற்றும் அருகாமையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை எனத் தெரிவித்தனா். ஆனாலும் அவா் போராட்டத்தை தொடா்ந்தாா். இதனையடுத்து சின்னதுரை உள்ட இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்