திருச்சியில் மருத்துவர்கள் அமைதி பேரணி -500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு!

மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்ட அமைதி பேரணி திருச்சியில் இன்று மாலை நடைபெற்றது. திருச்சி கோர்ட் எம்.ஜி.ஆர் சிலை அருகில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த அமைதி பேரணியில், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பெண் மருத்துவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும், பெண் மருத்துவரை படுகொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்