இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு
சிவசக்தி அகாடமி, கேர் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து நடத்திய “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” என்ற தலைப்பிலான உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி கேர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில், தனது எழுச்சிமிகு பாடல்கள் மற்றும் கவிதைகளால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒருங்கிணைக்க செய்த முண்டாசு கவிஞன் பாரதியின் பாடலான “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலுக்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றிணைந்து நடனமாடினர்.
இந்த சாதனை நிகழ்வானது ஜீனியஸ் உலக சாதனை புத்தக குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் நிகழ்ச்சி மேடையில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் சிவசக்தி அகாடமி நிறுவனர் மீனா சுரேஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் செல்வம், அஸ்வின் குழுமம் உரிமையாளர் கேஆர்பி கணேசன் மற்றும் ஜனனி டைல்ஸ் உரிமையாளர் தனசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Comments are closed.