திருச்சி மாவட்டம் மக்களுக்கு மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 2 கோடியே 58 லட்சம் கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு அவர்களுக்கு சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பாராட்டு…
தமிழக முதலமைச்சரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தயாரிக்கப்பட்ட கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம் ஓராண்டு சாதனை மலரையும், திருச்சி மாநகராட்சி ஓராண்டு சாதனை மலரையும் வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் திருச்சி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 2 கோடியே 58 லட்சம் கடனுதவி வழங்கியதற்கு சமூக ஆர்வலர் முனைவர் பா. ஜான் ராஜ்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார.
அத்துடன் அரசின் சாதனை விளக்க விளம்பர பலகையும் வைத்து உழைப்பின் ஓராண்டு இலக்கினை ஒட்டு பிள்ளைகளையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட இதை தொடர்ந்து 51 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூபாய் 2 கோடியே 58 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கி இருக்கிறார் என்பது சிறப்புக்குரியது கடந்த நாட்களில் தமிழகத்தில் மனுக்களைப் பெற்று சிறப்பாக மக்களுடைய பிரச்சினைகளை முன்னிறுத்தி அவர்களுக்கு உடன் உடன் தீர்வு காண்பதில் முதல் மாவட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் விருது வழங்கி கவுரவித்தது சிறப்புக்குரியது
அதுபோல் இன்றைய தினம் மகளிர் நலனுக்காக 51 குழுவினருக்கு 2.58 கோடி கடன் உதவி வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவரின் தாயுள்ளம் கொண்ட சேவையை திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பிலும் சமூக ஆர்வலர் என்ற முறையிலும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். திருச்சியிலே அவர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருப்பதற்கு முன்பாகவே RTO வாக பணியாற்றி சிறப்பாக திருச்சி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை புகார் மனுக்களை உடன் உடன் தீர்வு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது எனவே திருச்சி மாவட்டத்தின் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவராக சிறப்பாக பணியாற்றும் ஐயா சு. சிவராசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.