கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் எழுத்தூர் ஊராட்சி கிராமத்தை சேர்ந்த
மாற்றுத்திறனாளி அசோக்க்கு ஊராட்சி செயலாளர் பணி வழங்க வேண்டும் என திருச்சி சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
மாற்றுத்திறனாளி அசோக் என்பவர் கடந்த 2.12.2019 அன்று நடைபெற்ற ஊராட்சி செயலாளர் பணி நேர்முகத் தேர்வில் பங்கேற்று உள்ளார்.
ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரக்கூடிய அசோக் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன், மத்திய அமைச்சர் முருகன், எஸ்சி எஸ்டி ஆணையர் உள்ளிட்ட ஏனைய நபர்கள் பரிந்துரைகள் அளித்தும் வேலை தராமல் மறுக்கப்பட்டு வேறு ஒரு நபருக்கு பணம் பெற்றுக்கொண்டு பதவி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இதற்கு அரசாங்கத்தின் மூலம் உரிய நடவடிக்கை தேவை என அசோக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வறுமை நிலையில் மாற்றுத்திறனாளி மட்டுமல்ல ஒரு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய எதிர்காலத்திற்காக இந்த வேலை கிடைத்தால் நலமாக இருக்கும் என்று சொல்லி அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சுமார் 15 லட்சத்துக்கும் மேலாக பணம் பெற்றுக் கொண்டு அதேவேலையை மற்றொரு நபருக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபர் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இந்த பணியில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இது அரசுக்கும் ஊராட்சிக்கும் இது மிகப்பெரிய ஒரு தலைகுனிவு ஏற்படுத்துகிற ஒரு செய்தியாக இருக்கிறது.
எனவே தமிழக முதலமைச்சர், ஊராட்சித் துறை செயலர், தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.