திருச்சி சீராத்தோப்பு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அம்மனுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது!

1

திருச்சி மாவட்டம் சீராத்தோப்பு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு 250 கிலோ எடை கொண்ட காய்கறிகள் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சிறுமிகள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அம்மனை போற்றி பாடல்களை பாடியும், திருவிளக்கிற்கு மலர்கள் மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்தும் வழிபாடு நடத்தினர். பின்னர் மூலவரான ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மகா தீபாரணை நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியை பக்தர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

Bismi

- Advertisement -

- Advertisement -

1 Comment
  1. mitolyn says

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்