கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி சண்முகம், திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் சந்தித்தனர்.
இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கொலை, கள்ளச்சாராயம் விற்பனை அனைத்தும் தலைதூக்கி உள்ளது. அவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை.
மேலும் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.
தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம். அதனை தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் விடுதலை செய்யப்படுவார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என தெரிவித்தார்.