மின் கட்டணத்தை 3 வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காததை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மனும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு வழங்கவில்லை என்றும் திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர் வனிதா, இன்ஜினியர் இப்ராம்ஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.