திருச்சியில் பிரைன் ஓ பிரைன் சார்பில் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருவிழா – மாணவ, மாணவிகள் பங்கேற்பு!
திருச்சி பிரைன் ஓ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 154 வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருவிழா திருச்சி ஜோசப் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. 5 முதல் 14 வயது வரை உடைய குழந்தைகளுக்கான இப்போட்டியில் 7 மாவட்டங்களில் இருந்து 2000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு பிரைன் ஓ பிரைன் நிர்வாக இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மண்டல பொறுப்பாளர் ப்ரியா சிவலிங்கம் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இதில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் நடைபெறும் போட்டி மற்றும் துபாயில் நடைபெறும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.