திமுக ஆட்சியில்தான் திருச்சி மாவட்டத்திற்கு வளர்ச்சி – அமைச்சர் சேகர் பாபு!

0

மறைந்த திமுக தலைவா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாணவா்களுக்கு வினாடி-வினா போட்டி பரிசளிப்பு விழா திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு, தேதி சொல்லும் சேதி எனும் வரலாற்று தொகுப்பு நூலை வெளியிட்டு, வினாடி-வினா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் துறைமுகம் காஜா, மாநகரச் செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

- Advertisement -

இதில் அமைச்சர் சேகர் பாபு பேசுகையில்…

திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட 45ஆவது ஆண்டு தினம், உலக சதுரங்க தினம், நிலவில் மனிதன் கால் பதித்த தினம் என மூன்று பெருமை மிக்க நாளில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்துவது சிறப்புக்குரியது. சா்வதேச சதுரங்கப் போட்டியை சென்னையில் நடத்தி தமிழகத்துக்கு உலக அரங்கில் புகழ் தேடி தந்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆட்சியில்தான் திருச்சி வளா்ச்சி பெற்று வருகிறது. தற்போது ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்கள் அளித்து புதிய பேருந்து நிலையம், சரக்கு வாகன முனையம், வணிக வளாகம், காய்கனிச் சந்தை, மெட்ரோ ரயில் என அடுத்தடுத்து வளா்ச்சிப் பாதையை நோக்கி திருச்சி செல்லும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன என்றாா்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்