விக்கிரவாண்டி தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டு கேட்டு நூதன பிரச்சாரம் – சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் திருச்சியில் பேட்டி!

0

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 10-ம் தேதியும் அதனை தொடர்ந்து 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்தக் கட்சியின் கூட்டணியில் இருப்பதால் தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அப்படி இருந்தும் தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து பாமகவும், நாதகவும் களத்தில் உள்ளன.

- Advertisement -

இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

ஒய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியரும், சமூக ஆர்வலருமாகிய நான் திருச்சியில் நடந்து முடிந்த திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டேன். அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விருப்ப மனு அளித்தேன், ஆனால் எனது மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறி எனது மனுவை நிராகரித்தனர். ஏன் நிராகரித்தார்கள் என்று கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. மேலும் ஆளும் திமுக கட்சியின் தலையீடு காரணமாக எனது மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதனால் தான் நான் திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே உள்ள டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினேன். அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டேன். தற்போது நூதன முறையில் விக்கிரவாண்டி தொகுதியில் நோட்டாவுக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ய உள்ளேன். அதை தடுத்தால் நோட்டீஸ் வழங்குவேன். மேலும் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போக்குவரத்து ஊழியர்கள் சமூக ஆர்வலர்களை வேட்பாளர்களாக நிறுத்துவேன் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்