உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்கள் நலச்சங்கம் துவக்க விழா திருச்சியில் நடைபெற்றது!
தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கான நலச் சங்க துவக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் மாநில தலைவர் வரதராஜன் வரவேற்புரையாற்றினார். திருநெல்வேலி மனநல ஆய்வு வாரிய தலைவர் ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி செந்தில் குமரேசன் தலைமை வகித்தார். சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை கூடுதல் வழக்குரைஞா் ஜெனரல் பாஸ்கரன், பரிசுத்தம் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரித் தலைவா் அந்தோணிசாமி, ஈரோடு முகமது அலி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நல சங்கத்தின் வளா்ச்சிப் பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இறுதியாக மாநில செயலாளர் முகமது அக்பர் நன்றியுரை வழங்கினார்.