பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேற்றைய தினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது….
திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி ஊராட்சியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாத காலமாகியும் திறக்கப்படாததால், அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்கள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவம் பார்க்க முடியாமல் அவதி படுகிறார்கள். ஆகையால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் முன்னால் பட்டியல் அணி மாநில செயலாளரும் அரசங்குடி சக்தி கேந்திர பொறுப்பாளருமான இந்திரன், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்திகேயன், பிரபாகரன், முனிஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.