முதன்முதலில் நடிகை பிரியாமணி ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் கான்ட்ராக்ட் கில்லர்
முதன்முதலில் நடிகை பிரியாமணி ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் கான்ட்ராக்ட் கில்லர்
‘கொட்டேஷன் கேங்’ படம் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன், அஷ்ரப், அக்ஷயா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கொட்டேஷன் கேங்’. ஃபிலிம்னாட்டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டிரம்ஸ் சிவமணி இசை அமைத்துள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அப்போது பிரியாமணி பேசும்போது, “இயக்குநர் விவேக் என்னிடம் முதலில் சொன்ன கதை, சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. 2-வது சொன்ன இந்தக் கதையும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
நான் இதுவரை கான்ட்ராக்ட் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. இதில் சகுந்தலா என்ற கதாபாத்திரத்தில் நடித் திருக்கிறேன். இதில் எனக்கு அதிக சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. சன்னி லியோன், பத்மா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். கதையில் அவருக்கும் முக்கியத்துவம் உள்ளது” என்று தெரிவித்தார் .